இணுவில் அறிவாலயத்தில் முழுநிலா நாள் சிறுவர் கலையரங்கும் திருக்குறள் மனனப் போட்டிப் பரிசளிப்பும்இணுவில் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் முழுநிலா நாள் சிறுவர் கலையரங்கும், திருக்குறள் மனனப் போட்டிப் பரிசளிப்பு நிகழ்வும் நாளை வெள்ளிக்கிழமை(29.09.2023) மாலை-03 மணி முதல் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இணுவில் அறிவாலயத்தின் செயலாளர் வரதராஜா தனகோபி தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் வைத்திலிங்கம் சிறீஸ்கந்தவரோதயன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆசிரியர் சாம்பசிவம் முத்துக்குமாரசுவாமி சிறப்பு விருந்தினராகவும், விவசாயி இராசையா பால்ராஜன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.