மாணவர்களிடையே சூழல் கல்வி, சூழல் விழிப்புணர்வு, சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் ஆண்டு தோறும் வழங்கப்படும் பசுமை அமைதி விருதுகளுக்குரிய இணையவழி சூழல் பொது அறிவுப் பரீட்சை அடுத்தமாதம்-28 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
மேற்படி பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே சூழலியல் ஆசான் க.சி.குகதாசன் ஞாபகார்த்த தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்படும்.
இதேவேளை, மேற்படி பொது அறிவுப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி அடுத்தமாதம்-15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். மேலதிக தகவல்களைப் பெறவும், பதிவுகளை மேற்கொள்ளவும் www.tamilnationalgreen.org எனும் இணையத்தளமூடாக அணுகுமாறு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினர் கேட்டுள்ளனர்.
(செ.ரவிசாந்)