புதிதாக அமைக்கப்பட்ட குப்பிழான் தெற்கு கிராம அலுவலகத் திறப்பு விழா நாளை புதன்கிழமை(20.09.2023) காலை-09 மணி முதல் மடத்தடி, குப்பிழான் தெற்கு எனும் முகவரியில் இடம்பெறவுள்ளது.
குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், உடுவில் பிரதேச செயலர் தவச்செல்வம் முகுந்தன் சிறப்பு விருந்தினராகவும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி கெ.இந்திரமோகன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்துள்ளனர்.