வலிகாமம் வலய ஆசிரிய ஆலோசகர் க.சிவகரன் எழுதிய புவியியல் கற்பித்தல் முறைகள் நூல் அறிமுக நிகழ்வு நாளை புதன்கிழமை (27.09.2023) மாலை-03 மணி முதல் இணுவில் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வலிகாமம் வலயக் கல்வி நிர்வாகம், கல்வி அபிவிருத்திப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் வேலும் மயிலும் சேந்தன் நூலின் மதிப்பீட்டுரையை ஆற்றுவார்.
இந்த நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு நூலாசிரியர் அழைப்பு விடுத்துள்ளார்.