கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாளை வாணிவிழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை இந்துமாமன்றம் நடாத்தும் வாணி விழா நாளை செவ்வாய்க்கிழமை(24.10.2023) முற்பகல்-10.30 மணிக்கு மேற்படி கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் அகில இலங்கை சைவமகாசபையின் பொதுச் செயலாளரும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்தியகலாநிதி ப.நந்தகுமார் பிரதம விருந்தினராகவும், தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

நிகழ்வில் வாணி விழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.