தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வழமை போன்று வியாழக்கிழமையும் (04.09.2025) மல்லாகத்தில் இளைஞர்கள், மக்கள் பலரும் ஒன்றிணைந்து அடியவர்களின் தாகம் தீர்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் யாழ்ப்பாணம் வருகை தந்த நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்புப் பிரதி அமைச்சர் ரி.பி.சரத் காங்கேசன்துறை வீதியால் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளை நேற்றுப் பிற்பகல்-01.30 மணியளவில் திடீரென்று தனது வாகனத்திலிருந்து இறங்கி மேற்படி தாகசாந்தி நிலையத்திற்குச் சென்று அங்கு விநியோகிக்கப்பட்ட குளிர்மையான பானத்தை மக்களுடன் மக்களாக இணைந்து வாங்கிப் பருகியுள்ளார். இதன்போது யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் உடனிருந்தார்.இதேவேளை, பிரதி அமைச்சரின் செயல் பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.