நல்லூரில் பௌர்ணமி தினமான நாளை நீர்வள உரையாடலும், கலை நிகழ்வும்

 


யாழ்ப்பாணம் - நல்லூரில் உள்ள ஊருணி அரங்கில் மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் முழுநிலவு முற்றம் என்கிற பெயரில் நீர் சார்ந்த உரையாடலும் கலை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. 

அந்தவகையில் வடக்கின் நீர்வள உரையாடல் வட்டத்தினரின் ஏற்பாட்டில் பாரதியார் சிலையருகே உள்ள நெசவு பயிற்சி நிலையத்தில் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிவரை இடம்பெறவுள்ள நிகழ்வில் நீர்ப்புவிசரிதவியல் நிபுணரும் சமூகமட்டத்தில் நீர்வள பயிற்சி வளங்களில் அனுபவம் மிக்கவருமான குஜராத் மாநில அறிஞர் Dr.யோகேஷ் ஜடேஜா அவர்கள் zoom தொழிநுட்பம் ஊடாக இணைந்து கொள்கிறார். 

தொடர்ந்து ஈழத்து மெல்லிசைப் பாடல்களை  சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவியான விஷமயா ஜெயதீஸ் அவர்கள் பாடுகின்றார்கள். இந்நிகழ்வில் வடக்கின் நீர்வள உரையாடல் வட்டத்தினரும், நீர் ஆர்வலர்களும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். 

கடந்த நல்லூர் திருவிழாவில் இறுதி பத்து நாட்களும் சிறப்பாக இடம்பெற்ற நீர்வள கண்காட்சியில் மாலை உரையாடலும், கலைநிகழ்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று நீர் சார்ந்த கணிசமான விழிப்புணர்வையும், மக்களின் ஆதரவையும் பெற்றதன் அடிப்படையிலேயே   இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.