வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கலாமன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முதன்முறையாக மாபெரும் விசேட இரத்ததான முகாம் நிகழ்வு தேர்த் திருவிழா நாளான இன்று சனிக்கிழமை (06.09.2025) காலை-08.30 மணி முதல் மாலை-03 மணி வரை ஆலயச் சூழலில் ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள தொண்டைமானாறு தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெறும்.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் தன்னார்வக் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் முன்வந்து குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்குப் பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

