புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சாதித்த யாழ் மாணவன்

வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான தரம்- 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய  அகில இலங்கை அளவில் தமிழ்மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 மதிப்பெண்களைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த ஆனந்தசோதி லக்சயன் என்ற மாணவரே இவ்வாறு அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். குறித்த மாணவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதேவேளை, அகில இலங்கை  ரீதியில் சிங்களமொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.