காரைநகருக்கு யோகர் சுவாமிகள் வருகை தந்தமையைக் குறிக்கும் நூற்றாண்டு விழாவின் ஓர் அங்கமாகவும், கந்தபுராணம் காஞ்சிக் குமரக் கோட்டத்தில் அரங்கேறிய அதே ஆண்டு அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் ஆலயத்திலும் அரங்கேறிய நிகழ்வை நினைவுபடுத்தும் வகையிலும் கந்தபுராணம் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (05.09.2025) முற்பகல்-11.30 மணி முதல் யாழ் அரியாலை நீர்நொச்சித் தாழ்வு சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சைவப்பிரகாசப் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
