தெல்லிப்பழை துர்க்காதேவி தேர், தீர்த்தோற்சவ தினங்களில் இலவச முதலுதவிச் சேவை!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா தினமான வியாழக்கிழமையும் (04.09.2025), தீர்த்தத் திருவிழா தினமான வெள்ளிக்கிழமையும் (05.09.2025)  இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தெல்லிப்பழைப் பிரிவு இலவச முதலுதவிச் சேவையை வழங்கவுள்ளதாகப் பிரிவின் தலைவர் சி.நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

எமது உற்சவ கால அலுவலகம் துர்க்காதேவி ஆலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இயங்கும் எனவும், இரு தினங்களிலும் நோயாளர் காவு வண்டியுடன் கூடிய முதலுதவிச் சேவை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.