வெளியாகிறது புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு!



2025 ஆம் ஆண்டுக்கான தரம்- 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படுமெனவும் இலங்கைப் பரீட்சைத்  திணைக்களத்தின் ஆணையாளர் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம்-10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தரம்- 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 307, 951 மாணவர்கள் தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.