பல்கலைக்கழக அனுமதிக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க இணுவிலில் வசதி

2024 /2025 கல்வி ஆண்டுக்குரிய பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பங்களைப் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட நிறுவனமான இணுவில் பொதுநூலகத் தகவல் தொழில்நுட்ப மையத்தில் பெற்று நேற்றுத் திங்கட்கிழமை (01.09.2025) முதல் நிகழ்நிரல் (Online) மூலம் விண்ணப்பிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் காலை-09.30 மணி முதல் மாலை-04.30 மணி வரை இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

விண்ணப்பிக்க வரும் போது தேசிய அடையாள அட்டை இலக்கம், உயர்தரப் பரீட்சைச் சுட்டெண், இலங்கை வங்கியில் பணம் செலுத்திய துண்டு அல்லது நிகழ்நிரல் மூலம் பணம் செலுத்தக் கூடிய வசதிகள் இருப்பின் பணம் செலுத்தும் அட்டை (ATM Card) வசதி, முதல் விண்ணப்பப் படிவம் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியுடன் முதல் படிவத்தில் உள்நுழையக் கொடுக்கப்பட்ட கடவுச் சொல் (password), முதல் விண்ணப்பப் படிவம் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் கூடிய கைத்தொலைபேசி ஆகியவற்றைத் தவறாது கொண்டு  வரவும்.

இதேவேளை, மேலதிக தகவல்களுக்கு 0779775650, 0770737919, 0774431851, 0212241930 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.