தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை (09.09.2025) முதல் ஆரம்பமாகுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த கோரிக்கைகள் நாளை முதல் எதிர்வரும்- 22 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக ஏற்றுக் கொள்ளப்படும். இதற்காகப் பரீட்சார்த்திகள் தாம் கல்வி பயிலும் பாடசாலையின் அதிபர், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளத்தினுள் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மீளாய்வுக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.