தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார் மாவிட்டபுரம் கந்தப் பெருமான்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் நவராத்திரியின் விஜயதசமி நன்னாளான நாளை செவ்வாய்க்கிழமை (24.10.2023) சிறப்புப் பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.       

நாளை காலை- 06.30 மணிக்குத் திருவனந்தல் பூசை, காலை-08 மணிக்கு அபிஷேகம், காலை-09.30 மணிக்கு காலைச் சந்திப் பூசை, முற்பகல்-11.30 மணிக்கு கெளரிக் காப்புச் சங்கல்பம், பிற்பகல்-12.30 மணிக்கு உச்சிக்காலப் பூசை என்பன இடம்பெறும்.

மாலை-03.00 மணிக்கு அபிஷேகம், மாலை-04.30 மணிக்கு சாயரட்சைப் பூசை, மாலை-05.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெறுவதைத் தொடர்ந்து மாவைக் கந்தப் பெருமான் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் நோக்கி ஊர்வலமாகச் சென்று மாலை-06.30 மணிக்குத் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய முன்றலில் வியாக்கிரசம்ஹாரம்(வாழை வெட்டு) இடம்பெறும்.

மாலை-06.45 மணிக்குத் துர்க்காதேவி ஆலயத்தில் விசேட பூசையைத் தொடர்ந்து இரவு-07 மணிக்கு மாவிட்டபுரம் கந்தப் பெருமான் மீண்டும் ஆலயம் நோக்கிப்  புறப்படுவார். அதனைத் தொடர்ந்து இரவு-10.30 மணிக்கு அர்த்தசாமப் பூசை நடைபெறுமென மேற்படி ஆலய ஆதீன கர்த்தா தெரிவித்துள்ளார்.