நவராத்திரி விரதத்தின் முக்கிய தினங்களான சரஸ்வதி பூசை, விஜயதசமி விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்றுத் திங்கட்கிழமை(23.10.2023) அதிகாலை முதல் பழ வகைகள், இளநீர் உள்ளிட்ட பூசைக்குத் தேவையான பொருட்களின் வியாபாரம் சூடு பிடித்திருந்தது.
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் பொருட்களின் கொள்வனவில் ஆர்வம் செலுத்தியமையை அவதானிக்க முடிந்தது.
(செ.ரவிசாந்)