கொக்குவில் நந்தாவில் மனோன்மணி அம்பாள் கேதார கெளரி விரத வழிபாடு

கொக்குவில் கிழக்கு நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் கேதார கெளரி விரத வழிபாடு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (24.10.2023) ஆரம்பமானது.

தொடர்ந்து 21 தினங்களும் காலை அபிஷேகமும், மாலை லிங்க பூசையும் இடம்பெறும்.

இதேவேளை, கெளரி நூலுக்குப் பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் 300 ரூபா செலுத்திப் பதிவு செய்து கொள்ளுமாறு மேற்படி ஆலய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.