யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு 21, 22 ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தால் கொடூரமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்.நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகளில் யாழ்.வைத்தியசாலைப் படுகொலை எனப் பெரிய எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த போது படுகொலை செய்யப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுப் பதினெட்டுப் பேரின் ஒளிப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.