புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று வியாழக்கிழமை(26.10.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் எதிர்வரும்-31 ஆம் திகதி வரை மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் பிரதி ஆணையாளர் நாயகம் லசிக சமரக்கோன் தெரிவித்தார்.
தவணைப் பரீட்சைகள் இடம்பெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை(27) முதல் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையானது கடந்த-15 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.