ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நாளை

ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை ஞாயிற்றுக்கிழமை(15.10.2023) மாலை-06 மணி முதல் ஏழாலை கிழக்குப் புனித இசிதோர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

அனைத்து அங்கத்தவர்களையும், புதிதாக அமைப்புடன் இணைய விருப்பமுள்ளவர்களையும் மேற்படி பொதுக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்வதுடன் எதிர்காலத் திட்டம் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களினையும் பகிர்ந்து கொள்ளுமாறு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் தற்போதைய நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.