சுன்னாகம் மயிலணி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூசை வழிபாடு


'வடலியம்மன்' என அழைக்கப்படும் யாழ்.சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த நவராத்திரி பூசை வழிபாடுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை(15.10.2023) மாலை-04 மணியளவில் அபிஷேகம், பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் ஒன்பது தினங்கள் தினமும் மாலை-04 மணி முதல் அபிஷேகம், பூசை, துர்க்கா- லக்ஸ்மி, சரஸ்வதி பூசை மற்றும் நவராத்திரி ஹோமம் என்பன சிறப்பாக இடம்பெறவுள்ளது. நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமித் திருவிழா எதிர்வரும்-24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும். அன்றையதினம் காலை-06 மணி முதல் சிறார்களுக்கான ஏடு தொடக்கல் நிகழ்வும் நடைபெறும். 

(செ.ரவிசாந்)