ஆரியகுளத்தில் நாளை வருடாந்த இரத்ததான முகாம்


Lions Club Of Jaffna New World இன் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(15.10.2023) காலை-09.30 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை ஆரியகுளம் முற்போக்கு வாலிபர் கழக அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு  இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.