உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிப்பு!

         

உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ப்ரைட் ரைஸ் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவாலும், கொத்து ரொட்டிப் பொதி ஒன்றின் விலை 20 ரூபாவாலும், தேநீரின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.   

நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையினால் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.