தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(06.10.2023) நண்பகல்-12 மணியளவில் மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் வேலும் மயிலும் சேந்தன், யாழ்.இணுவில் மத்திய கல்லூரியின் ஆசிரியர் திருமதி.எஸ்.ராகினி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். 

குறித்த நிகழ்வில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டுப் பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.