யாழில் ஒரு மணிநேரம் நீடித்த மழைவீழ்ச்சி!

இன்று வெள்ளிக்கிழமை(20.10.2023) முற்பகல்-10.30 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரை  யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறிப்பாக கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி, கந்தர்மடம், நல்லூர், இணுவில், மருதனார்மடம், சுன்னாகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒரு மணித்தியாலம் வரை நீடித்த குறித்த மழைவீழ்ச்சியினால் வீதிகள், தாழ்நிலப் பகுதிகள் பலவற்றிலும் மழைவெள்ளநீர் தேங்கி நிற்கின்றமையை அவதானிக்க முடிகிறது.

மழைவீழ்ச்சியின் பின்னர் மப்பும் மந்தாரமுமான காலநிலை நிலவியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.