கோப்பாயில் நாளை கல்வித்துறை ஆய்வு நூல் வெளியீட்டு விழா

ஓய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வீ.இராசையா எழுதிய இலங்கை சுதந்திரம் அடைந்த பின் கல்வித் துறையில் ஏற்பட்ட விரிவாக்கம்-  ஓர் ஆய்வு (1505 -1980) எனும் நூலின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை(21.10.2023) மாலை-03 மணி முதல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சு.பரமானந்தம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் றெஜீனா இருதயநாதன், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் ஆகியோர் வாழ்த்துரைகளை ஆற்றவுள்ளனர்.      

வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் நூலின் வெளியீட்டுரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஜெயலட்சுமி இராசநாயகம் நூலின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.