இலங்கையில் தேசியவாதத்தின் எதிர்காலம் எனும் தொனிப் பொருளிலான ராஜனி திராணகம ஞாபகார்த்த உரையாடல் நாளை சனிக்கிழமை (21.10.2023) மாலை-03 மணிக்கு யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள சென் ஜோன் த பப்டிஸ்ட் தேவாலய பரிஷ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ,
ராஜனி திராணகம ஞாபகார்த்தக் குழு, சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள மேற்படி உரையாடல் நிகழ்வில் சட்டத்தரணியும், தொழிற்சங்கவாதியுமான செல்வி.சுவஸ்திகா அருளிங்கம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழக இளைப்பாறியப் பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ், களனிப் பல்கலைக்கழகப் பேராசியர்.பிரபா மனுரட்ன, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி.மகேந்திரன் திருவரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு உரைகள் நிகழ்த்தவுள்ளனர்.
இதேவேளை, குறித்த உரையாடல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.