உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டுக் காரைநகர் பிரதேச சபை காரைநகர் பிரதேச சனசமுக நிலையங்களுக்கு இடையே உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி-2023 நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டியில் காரைநகர் பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட சனசமூக நிலையத்தின் பெயரில் அணிகளைப் பதிவு செய்ய முடியும். போட்டிகள் நியம விதிகளுக்கமைய நடாத்தப்படும். போட்டி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் அணிகள் மைதானத்திற்கு வருகை தர வேண்டும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
குறித்த போட்டிக்காக 0770169856, 0771444845 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
இதேவேளை, பதிவுகளுக்கான இறுதித் திகதி இன்று-01 ஆம் திகதி புதன்கிழமை எனக் காரைநகர் பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.