வடகிழக்கில் தொல்லியல் நில ஆக்கிரமிப்பும் தொல்லியல் அரசியலும்: நாளை இணையவழிக் கலந்துரையாடல்

சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் - கொழும்பு நடாத்தும் வடகிழக்கில் தொல்லியல் நில  ஆக்கிரமிப்பும் தொல்லியல் அரசியலும் எனும் தலைப்பிலான உரைகளும் கலந்துரையாடலும் நாளை வியாழக்கிழமை(02.11.2023) இரவு-07.30 மணியளவில் இணையவழியில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர் திருநாவுக்கரசு கோபகன் பிரதான உரை நிகழ்த்துவார். தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷிரின் ஷரூர் கருத்துரை வழங்குவார், உரைகளைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் இணைந்து கொள்வதற்கான ZOOM ID:- 7752874214, PASS CODE:- 854125 ஆகும். ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வில் பங்குபெறுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.