சுழிபுரம் கதிர்வேலாயுதசுவாமி இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்

சுழிபுரம் ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும்- வெள்ளிக்கிழமை(03.11.2023) காலை-09.13 மணி முதல் முற்பகல்-10.25 மணி வரையுள்ள சுப வேளையில் இடம்பெறவுள்ளது.

இராஜகோபுர மஹா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் நாளை புதன்கிழமை (01.11.2023) காலை-06.05 மணியளவில் ஆரம்பமாகும். 

நாளை மறுதினம் வியாழக்கிழமை(02.11.2023) காலை-08 மணி முதல் மாலை-04 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் நிகழ்வு இடம்பெறும். 

இதேவேளை, மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டாலாபிஷேகம் நடைபெறுமெனவும் மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.