மின்சாரக் கட்டணத்தை திருத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மின்சாரக் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.   

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை(31.10.2023) அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர்மேலும் தெரிவிக்கையில்,   

முன்னதாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந் நிலையில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற் கொண்டு அதனை மாற்றியமைப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதன்படி எதிர்வரும் காலங்களில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.