திருக்கார்த்திகை விளக்கீட்டுத் திருநாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.11.2023) இரவு திருக்கார்த்திகை தீபங்களால் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமச் சூழல் அழகொளிரக் காட்சியளித்தது.
திருக்கார்த்திகையை முன்னிட்டு மாலை-06.30 மணியளவில் ஆச்சிரமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமான், சிவலிங்கப் பெருமான் மற்றும் ஈழத்து- இந்தியச் சித்தர்களின் உருவப்படங்களுக்கு விசேட வழிபாடுகள் நடைபெற்றதுடன் வரிசையாக கார்த்திகைத் தீபங்கள் ஏற்றப்பட்டு ஆச்சிரமச் சூழல் ஒளிவீசிப் பிரகாசித்தமையை அவதானிக்க முடிந்தது.