இருபாலையில் விநாயகர் விரத லட்சார்ச்சனைப் பெருவிழா

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய விநாயகர் விரத லட்சார்ச்சனைப் பெருவிழா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (28.11.2023) ஆரம்பமானது. அடுத்தமாதம்-17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இவ் ஆலய விநாயகர் விரத லட்சார்ச்சனைப் பெருவிழா  நடைபெறவுள்ளது.

லட்சார்ச்சனைப் பெருவிழா காலப் பகுதியில் தினமும் மாலை-03.30 மணியளவில் அபிஷேகம், மாலை-04.30 மணியளவில் மூலஸ்தானப் பூசை, மாலை-04.30 மணியளவில் விசேட வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து லட்சார்ச்சனையும் அதனைத் தொடர்ந்து பெருங்கதைப் படிப்பும் இடம்பெறும்.

அடுத்தமாதம்-17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-05 மணியளவில் கஜமுகசூர சங்கார உற்சவமும் தொடர்ந்து லட்சார்ச்சனைப் பூர்த்தியும் நடைபெறும். மறுநாள்-18 ஆம் திகதி திங்கட்கிழமை விநாயகர் சஷ்டி உற்சவம் மாலை-03 மணியளவில் அபிஷேகத்துடன் ஆரம்பமாகும். அன்றையதினம் மாலை-04 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான் வீதி உலா வருதலும், பிள்ளையார் கதைப் படிப்பும் நடைபெறுமென மேற்படி ஆலயத்தினர் தெரிவித்துள்ளனர்.


 (செ.ரவிசாந்)