அச்சுவேலிப் பொதுநூலகத்தின் வாசிப்பு மாத இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அச்சுவேலிப் பொதுநூலகத்தின் வாசிப்பு மாத இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நாளை வெள்ளிக்கிழமை(01.12.2023) பிற்பகல்-02 மணி முதல் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அச்சுவேலி உப அலுவலகப் பொறுப்பதிகாரி வ.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ந.ஆதவன் பிரதமவிருந்தினராகவும், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் செயலாளர் இ.பகீரதன் மற்றும் யாழ்.அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள்மரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.