குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் விநாயகர் விரதத் திருவிழா ஆரம்பம்

     


குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய விநாயகர் விரதத் திருவிழா நேற்றுச்  செவ்வாய்க்கிழமை(28.11.2023) ஆரம்பமானது. 

இவ் ஆலய விநாயகர் விரதத் திருவிழா அடுத்தமாதம்-18 ஆம் திகதி திங்கட்கிழமை வரை தொடர்ந்தும் 21 தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

விநாயகர் விரத திருவிழா காலப் பகுதியில் தினமும் மாலை-03 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி உலா வரும் காட்சியும், பெருங்கதைப் படிப்பும் நடைபெறும். அடுத்த மாதம்-16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-03 மணிக்கு கஜமுகசூர சங்காரத் திருவிழாவும், 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-08 மணிக்கு மஹாகணபதி ஹோமமும், 108 கலச சங்காபிஷேகமும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.  

(செ.ரவிசாந்)