யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்....

மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(04.11.2023) காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, குருநகர் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம், நெபாட் வலைத் தொழிற்சாலை, மணியந் தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, கட்டடத் திணைக்களம்- கடற்கரை வீதி, ஏ.வி.வீதி, கொழும்புத்துறை, கடற்கரை வீதி, பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை நெடுங்குளம் வீதி, சுவாமியார் சந்தி, டேவிட் வீதி, கடற்கரை வீதி- குருநகர், மணியந் தோட்டம், பாசையூர், உதயபுரம், கார்கில்ஸ்- மானிப்பாய், கொமர்ஷல் வங்கி- மானிப்பாய், ஈஞ்சடி வைரவர் கோவிலடி, மானிப்பாய் மருத்துவமனை, மானிப்பாய் சந்தை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(செ.ரவிசாந்)