லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு விலை நாளை சனிக்கிழமை(04.11.2023) முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இதன்படி, 12.5 கிலோக் கிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலையை 70 ரூபா முதல் 90 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், திருத்தப்பட்ட விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.