சுன்னாகம் பொதுநூலகத்தில் நாளை புத்தாக்கக் கண்காட்சி ஆரம்பம்

சுன்னாகம் பொதுநூலகத்தின் டிஜிட்டல் அறிவு மையத்தின் புத்தாக்கக் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை(10.11.2023) காலை-10 மணிக்குச் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் ஆரம்பமாகும்.

நாளை காலை-10 மணி முதல் மாலை-05 மணி வரை புத்தாக்கக் கண்காட்சி நடைபெறவுள்ளது.நாளை மறுதினம் சனிக்கிழமையும்(11.11.2023) காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை கண்காட்சி இடம்பெறும்.

இந்தக் கண்காட்சியில் மேற்படி நூலக டிஜிட்டல் அறிவு மைய மாணவர்களின் வியப்பூட்டும் புத்தாக்கங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. எனவே, பாடசாலை மாணவர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கண்காட்சியைப் பார்வையிட்டுப் பயன்பெறுமாறு சுன்னாகம் பொதுநூலக நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

(செ.ரவிசாந்)