தெல்லிப்பழையில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(07.11.2023) காலை-8.30 மணி முதல் நேற்றுப் புதன்கிழமை (08.11.2023) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்தக் காலப் பகுதியில் தெல்லிப்பழையில் 101.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், குறித்த மழைவீழ்ச்சி இந்த மாதத்திலேயே(கார்த்திகை) யாழ்.மாவட்டத்தில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

(செ.ரவிசாந்)