கோப்பாயில் தீபாவளித் திருநாளான நாளை இரத்ததான முகாம்


சமூக ஆர்வலர் அமரர். பூபாலசிங்கம் அன்புராசன் நினைவாக அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு தீபாவளித் திருநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை (12.11.2023) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-12.30 மணி வரை கோப்பாய் வடக்கு சிறுவர் மகிழ்வகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.