மாதகல் கிராம மக்கள் அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை

மாதகல் நலன்புரிச் சங்கமும் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கமும் இணைந்து "பசுமையில் மாதகல்" மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தை இவ் வருடமும் செயற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

குறித்த திட்டத்திற்கமைய மாதகல் கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலும் வசிக்கும் குடும்பங்கள் இலவச மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும். பயனாளி ஒருவருக்கு 600 ரூபா பெறுமதியான பழ மரக்கன்றுகள் வழங்கப்படும்.    

மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும். மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ள   விரும்புவோருக்கான பதிவு நடவடிக்கைகள் நேற்று முன்தினம்-31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அடுத்த மாதம்-10 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் முன்பதிவுகளைச் செய்ய முடியும். 

திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மாலை-03 மணி முதல் மாலை-05 மணி வரையும், சனி, ஞாயிறு தினங்களில் காலை-09 மணி முதல் முற்பகல்-11 மணி வரையும், குறித்த இரு தினங்களிலும் மாலை-03 மணி முதல் மாலை-05 மணி வரையும் தமது குடும்ப அட்டையைத் தவறாது எடுத்து வருகை தந்து மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதேவேளை, பதிவு செய்தவர்களுக்கான இலவச மரக்கன்றுகள் இந்த மாதம்-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் வைத்து வழங்கப்படுமென மாதகல் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.