வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுன்னாகம் பொதுநூலகத்தின் தேசியவாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா நாளை வியாழக்கிழமை(14.12.2023) பிற்பகல்-02.30 மணி முதல் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சாரதா உருத்திரசம்பவன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் உடுவில் பிரதேச சமூக மருத்துவர் திருமதி.ஜெ.ரத்னலஜி பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வுநிலை நூலகர் மு.சின்னராஜா, யாழ்.உடுவில் மான்ஸ் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் திருமதி.ம.செல்வமாலினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
(செ.ரவிசாந்)