உரிமை கோரப்படாத கால்நடை: காரைநகர் பிரதேச சபை விடுத்துள்ள அறிவித்தல்


காரைநகர் கள்ளித்தெருப் பிரதேசத்தில் கட்டாக்காலியாகப் பிடிபட்ட   ஒரு ஆடு உரிமை கோரப்படாத நிலையில் காரைநகர் பிரதேச சபையின் கால்நடைப் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, உரியவர்கள் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்து அதற்கான தண்டப்பணம் மற்றும் இதரக் கொடுப்பனவுகளைச் செலுத்தி விரைவாகப் பெற்றுக் கொள்ளுமாறும், உரிய காலத்தில் பெற்றுக் கொள்ளாதவிடத்து சபை சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.