கோண்டாவில் சபரீச ஐயப்பனுக்கு நாளை கொடியேற்றம்

'ஈழத்துச் சபரிமலை' என அழைக்கப்படும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கார்த்திகை உத்தர நன்னாளான நாளை புதன்கிழமை(06.12.2023) காலை-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ளது. 

எதிர்வரும்-13 ஆம் திகதி புதன்கிழமை இரவு-07 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும். 

(செ.ரவிசாந்)