யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய விநாயகர் விரத உற்சவம் கடந்த மாதம்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. எதிர்வரும்-18 ஆம் திகதி திங்கட்கிழமை வரை தொடர்ந்தும் 21 தினங்களுக்கு விநாயகர் விரத உற்சவம் இடம்பெறவுள்ளது.
விநாயகர் விரத காலப் பகுதியில் தினமும் மாலை-03 மணியளவில் விநாயகர் பெருங்கதைப் படிப்பும் அதனைத் தொடர்ந்து பூசையும் நடைபெறும். எதிர்வரும்-17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-02 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். விசேட பூசையைத் தொடர்ந்து மாலை-03.30 மணியளவில் கஜமுகசூர சங்காரம் இடம்பெறும். மறுநாள்-18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணியளவில் விநாயகர் சஷ்டி விரத பூசையும், விநாயகர் பெருங்கதைப் படிப்பும், விரதப் பூர்த்தியும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.