யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்....

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(05.12.2023) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, பண்டத்தரிப்பு, முல்லைவைரவர் கோவிலடி- பண்டத்தரிப்பு, பெரியவிளான், இளவாலை வைத்தியசாலை, ஆலடி- இளவாலை, மெய்கண்டான், சேந்தான்குளம்-இளவாலை, சென்ட் ஜீட் - இளவாலை, மாரீசன்கூடல், பொலிகண்டி ஐஸ் தொழிற்சாலை, பொலிகண்டி நாச்சிமார் கோவிலடி, இலந்தைக்காடு, நெடியகாடு, கொற்றாவத்தை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

(செ.ரவிசாந்)