கோண்டாவில் அற்புதநர்த்தன விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை

கோண்டாவில் ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலயத்தில் விநாயகர் விரதத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை கடந்த செவ்வாய்க்கிழமை (28.11.2023) ஆரம்பமாகித் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

தொடர்ச்சியாக 21 தினங்களும் தினமும் மாலை-04 மணியளவில் அபிஷேகம், பூசையும் அதனைத் தொடர்ந்து லட்சார்ச்சனையும் நடைபெறும்.

இதேவேளை, தினமும் காலை-07 மணி முதல் காலை-08.30 மணி வரை இவ் ஆலயத்தில் பிள்ளையார் பெருங்கதைப் படிப்பும் இடம்பெறுவதாக மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.