நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(01.12.2023) காலை-08.30 மணி முதல் நேற்றுச் சனிக்கிழமை (02.12.2023) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறைப் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த காலப் பகுதியில் பருத்தித்துறையில் 79.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேற்படி காலப் பகுதியில் நயினாதீவில் 49.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணம் கோட்டையில் 45.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.கஸ்தூரியார் வீதியில் 36.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மீசாலையில் 33.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தொல்புரத்தில் 25.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரியில் 23.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வடமராட்சி அம்பனில் 20.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 20 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை(30.11.2023) இரவு-08.30 மணி முதல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(01.12.2023) காலை-08.30 வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் அச்சுவேலிப் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 55.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(செ.ரவிசாந்)