கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஊடக மன்றத்தினால் வெளியிடப்படும் மாதாந்த வெளியீடான கலாதீபம் மின்னிதழின் மார்கழி மாத இதழ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(01.12.2023) வெளிவந்துள்ளது.
கடந்த கார்த்திகை மாதம்-01 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கலாசாலையில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஒளிப் படங்களுடன் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் கலாசாலையின் ஆசிரிய மாணவர்களின் சில ஆக்கங்களையும் தாங்கி வெளிவந்துள்ளது.
இதேவேளை, noolagam.org எனும் இணையத்தளத்தில் கலாதீபம் மார்கழி மாத மின்னிதழைப் பார்வையிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.