இரண்டு வீதக் கடன் வட்டி நிவாரணத்தின் கீழ் தொழில் முனைவோருக்குத் தேவையான மூலதனத்தை வழங்குவதாகவும், இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 2.8 வீதமான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பணி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டிற்குள் தொழில் முனைவோர் எண்ணிக்கையைப் பத்து வீதமாக உயர்த்துவதே இதன் இலக்கெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.